About

அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கையே ஒரு பாடம்தான். எனினும் அவரின் வாழ்வில், அவருடைய அனுபவங்கள் அடிப்படையில், இந்தியாவின் அனைத்து துறைகளின், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான விதைகளை நமக்கு வழங்கி இருக்கிறார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அவரது பார்வையில் விளைந்த, அந்த ஒட்டுமொத்த விதைகளின் சாராம்சம் மூலமாகத்தான் இந்தியாவை கட்டமைக்க முடியும்.

கலாமின் வழிகாட்டுதல்களை குழந்தைகளின் மூலமாகவும், பாடத்திட்டத்தின் மூலமாகவும், அரசியல் அமைப்பு வழியாகவும், அரசு சாசனங்கள் வழியாகவும் நடைமுறைப்படுத்தி, இளைஞர்களின் ஒட்டுமொத்த சக்தியை, கலாம் கண்ட இந்தியாவைப் படைக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இப்புத்தக ஆசிரியரின் நோக்கமாக இருக்கின்றது.

கலாமின் புதிய அவதாரமாக "கலாமிற்காக ஒரு நிமிடம் ப்ளீஸ்" என்கிற புத்தகம் படைக்கப்பட்டுள்ளது.

In a Nutshell

அப்துல் கலாம் அவர்கள், தனது அனைத்துத் துறை அறிவின் அடிப்படையில், வளர்ந்த இந்தியாவைப் படைக்க, பல்வேறு திட்டங்களை முன்மொழிந்துள்ளார். அவரின் சிந்தனைகளிலிருந்து, இந்தியாவின் வளர்ச்சிக்காக, அதிக முக்கியத்துவம் வாய்ந்த, 20 துறைகளுக்கு அவர் அளித்த திட்டங்கள் தான் இந்தப் புத்தகத்தில் 20 தாரக மந்திரங்களாக வழங்கப்பட்டுள்ளது.

Download Now

First Word

பாரதத்தின் பெருமை மிகு மனங்களுக்கும், எனது முழு நம்பிக்கையான, பாரதத்தின் மேல் அக்கறை மிக்க இளைஞர்களுக்கும், மீண்டும் எனது எதிர்பார்ப்பை எழுத்துக்களாக சமர்ப்பிப்பதில், சற்று தயக்கமே எனினும் இன்று அதற்கான முழு தேவை இருப்பதால் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

எனது வாழ்நாளில், நான் அவசியமாய் சந்திக்க விரும்பிய வலிமை படைத்த வளமோங்கிய பாரதத்தினை படைக்கின்ற மையப்புள்ளியான 2020 ல் தான் நீங்கள் நிற்கிறீர்கள். எனது கனவு மிகு வருடம், உங்களின் கருணைமிகு கரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவை, வளர்ச்சி அடைந்த நாடாக்க, முழுமையான திட்டங்களை வகுத்துச் சென்றேன். அந்தத் திட்டங்களை வெறும் மேடைகளில் பேசுவதோடு விட்டுவிட்டீர்கள். பாரதம் இன்றும் பிறரை எதிர்பார்த்தே வாழ்கின்றது.

அதற்காகவே என்னை நான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து, இந்த புத்தகமாக அவதரித்து இருக்கிறேன்.

பண்பு மிகு இளைஞர்களான உங்களை, பெருமைமிகு பாரதம் படைக்க மீண்டும் அழைக்கின்றேன். வாருங்கள் திட்டங்களை செயலாக்கி, எனது 2020 கனவை, அதாவது பாரதத்தை உலக அரங்கில் வளர்ச்சி அடைந்த நாடாக முன் நிறுத்துங்கள்

பாரதத்தின் மீதான உங்கள் நம்பிக்கையை விட பாரத்தை உயர்த்துவதற்காக நான் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிக வலுவானது. என்றும் அன்புடன் APJ. அப்துல்கலாம்

Praise Words

சுவாமி விவேகானந்தர்

“பாரதத்தின் பெருமைகளில் மிஞ்சியுள்ள தியாகங்களை அடிப்படையாகக்கொண்டு, 2020ல் இந்தியாவை மீண்டும் விழித்தெழச் செய்யும் சக்தி படைத்த, வீர இளைஞர்களை கலாம் அழைத்திருக்கிறார். அதனை வழிமொழிந்து உருவாகியுள்ளது, இந்த புத்தகம் எனும் பொக்கிஷம்.”

மோகன்தாசு கரம்சந்த் காந்தி

“அப்போதைய இந்தியாவை மீட்டெடுக்க நம்மிடம் 'அகிம்சை' என்னும் ஆயுதம் இருந்ததைப் போல மீண்டும் அப்படிப்பட்ட உணர்வுமிக்க இந்தியாவை புதுப்பிக்க இப்புத்தகம் போன்ற, ஒரு ஆயுதம் அவசியப்படுவதை நான் உணர்கிறேன்.”

சுப்பிரமணிய பாரதி

“பாரத தேசத்தின் ஆணிவேராக இருக்கும் இளைஞனின் ஒட்டுமொத்த சக்தியை, அச்சம் தவிர்த்து எழச் செய்யும் துணிவுமிக்க எழுத்துக்கள் இவை. வந்தேமாதரம் ! ! !”

Team

AUTHOR

Yuva Padmanabhan

EDITOR

Sumathi Ravichandran CEO- YUVA 2.0

PUBLISHED BY

ISC Publications

RESEARCH TEAM

D.Paneer Selvan, N.Bhuvaneshwari

DIGITAL PUBLICATION

Hari Krishnan, A.Ravi Kanthan, Uma Subramani, Dr Krishna ,Mr Manoj

DESIGNER

Jaswanth N.S, Meyyalingam K, M.Balasubramanian

Get in touch

Contact